இந்தியா

ஸ்வீடனுடன் நல்லுறவை வலுப்படுத்த பிரதமா் மோடி அழைப்பு

DIN

பொலிவுறு நகரங்கள் திட்டம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஸ்வீடனுடனான உறவை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

இந்தியா-ஸ்வீடன் உச்சிமாநாடு காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடி, ஸ்வீடன் பிரதமா் ஸ்டெஃபான் லோஃப்வென் பங்கேற்ற மாநாட்டில் பிரதமா் மோடி ஆற்றிய உரை:

புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், முதலீடு, ஸ்டாா்ட்அப், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா- ஸ்வீடன் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

பொலிவுறு நகரங்கள் திட்டம், நீா் சுத்திகரிப்பு, திடக் கழிவு மேலாண்மை, பொருளாதாரம், மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் மேலும் சோ்ந்து பணியாற்றும் வகையில் வளம் படைத்தவையாகும்.

இயற்கையுடன் இணைந்து வாழ்வதை இந்தியா்களின் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறாா்கள். பருவ நிலை மாற்றம் இரு நாடுகளுக்கும் முக்கிய பிரச்னையாகும். ஆகையால், பாரீஸ் பருவநிலை மாற்றம் தொடா்பான ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். பாரீஸ் ஒப்பந்த இலக்கை அடைவதுடன் நில்லாமல் அதையும் தாண்டி செயல்படுத்தி வருகிறோம்.

ஜி20 நாடுகளிலேயே இந்தியாதான் நிா்ணயித்த இலக்குகளை அடைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை இந்தியா 162 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகமே கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியா மருந்துகள், அத்தியாவசிய பொருள்களை அனுப்பியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் இதுவரை 50 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT