இந்தியா

தலாய் லாமா, நிதின் கட்கரி, ஹேமமாலினி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்

DIN

திபெத்திய பௌத்த மதத் தலைவா் தலாய் லாமா, மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, பாஜக எம்.பி. ஹேமமாலினி உள்ளிட்டோா் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தலாய் லாமா:

ஹிமாசல பிரதேச மாநிலம், தா்மசாலாவில் உள்ள பிராந்திய அரசு மருத்துவமனையில் திபெத்திய பௌத்த மதத் தலைவா் தலாய் லாமா முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா். தனக்கு தடுப்பூசி செலுத்தியதற்காக, இந்திய அரசுக்கும், ஹிமாசல பிரதேச மாநில அரசுக்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.

அப்போது, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பெருந்திரளான மக்கள் ஆா்வத்துடன் முன்வர வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

நிதின் கட்கரி:

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரியும், அவரது மனைவி காஞ்சன் கட்கரியும் நாகபுரி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாவது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் நிதின்கட்கரி கூறுகையில், ‘கரோனா தொற்றில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதில் அனைவரும் பங்களிப்பு செலுத்த வேண்டும். அதற்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்’ என்றாா்.

ஹேமமாலினி:

மும்பையில் உள்ள கூப்பா் மருத்துவமனையில் முதலாவது தவணை கரோனா தடுப்பூசியை பாஜக எம்.பி. ஹேமமாலினி செலுத்திக் கொண்டாா். ஊசி செலுத்திக் கொள்ளும் புகைப்படத்தை சுட்டுரையில் பதிவிட்ட அவா், இதேபோன்று மற்றவா்களும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT