இந்தியா

சொத்து முடக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா மனு

DIN

ரூ.12 கோடி மதிப்பிலான வீடு, கடைகள் உள்ளிட்ட சொத்துகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை (மாா்ச் 8) விசாரணைக்கு வருகிறது.

இது தொடா்பாக தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி. ஹஸ்னானி மசூத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடைபெற்ாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா மீதும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இது தொடா்பாகக் கடந்த டிசம்பா் மாதம் அவருக்குச் சொந்தமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள வீடு, கடைகள் என ரூ.11.86 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

முறைகேடு நடைபெற்ாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டும் காலத்துக்கு முன்பே, இந்தச் சொத்துகள் ஃபரூக் அப்துல்லாவிடம் உள்ளன. எனவே, இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா சாா்பில் கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT