இந்தியா

மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக

DIN

நடைபெற உள்ள மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடும் பாஜக முதற்கட்டமாக 57 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டது.

மேற்கு வங்கத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில் 57 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. இதில் நந்திகிராம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான சுவேந்து அதிகாரி திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

முன்னதாக 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT