இந்தியா

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் காயம் 

6th Mar 2021 10:56 AM

ADVERTISEMENT

 

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

கோசாபா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும், அவர் கூறுகையில், 

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில் காயமடைந்தவர்கள் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

காயமடைந்தவர்கள் கேனிங் துணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரும் பாஜகவின் ஆதரவாளர்கள் என்றும், திருமண விழாவிற்கு வந்திருந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களைத் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து உள்ளூர் மக்களுடன் விசாரித்து வருவதாகவும் காவல்துறை 
அதிகாரி கூறியுள்ளார். 

Tags : Bengal bomb blast
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT