இந்தியா

தடுப்பூசி போட்டாலும் கவனம்: 2 கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவருக்கு கரோனா

DIN


ரூர்கேலா: ரூர்கேலா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் மருத்துவர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டு மூன்று வார காலம் ஆகும் நிலையில் தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி இந்த மருத்துவர் கோவிஷீல்டு தடுப்பூசியை முதல்கட்டமாக செலுத்திக் கொண்டார், பிப்ரவரி 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், மார்ச் 3-ஆம் தேதி அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டது. அப்போது அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்ட போது அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

எனக்கு லேசான இருமல் ஏற்பட்டது, ஆரம்பத்தில் வயது முதுமை காரணமாக இதயப் பிரச்னையால் ஏற்படும் போது அறிகுறி என்று நினைத்தேன். பிறகுதான் கரோனா அறிகுறியோ என்று நினைத்து பரிசோதனை செய்து கொண்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் எனக்கு எப்படி கரோனா தொற்று பாதித்தது என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் போது என்னைச் சுற்றி நோயாளிகளாகத்தான் இருப்பார்கள். யாரும் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அப்படி பணியாற்றும்போது ஏதோ ஒரு நோயாளியிடமிருந்து எனக்கு தொற்று பாதித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். அவர் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருக்கு இருமல் தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், கரோனா தொற்றினால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் அரசு வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT