இந்தியா

மீண்டும் அச்சுறுத்தும் கரோனா: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு நோய்த்தொற்று

6th Mar 2021 09:51 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாடு முழுவதும்  24 மணி நேர காலகட்டத்தில் 18,327 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 1,11,92,088 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் 1,08,54,128 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 108 போ் உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,57,656 போ் உயிரிழந்தனா். இது மொத்த பாதிப்பில் 1.41 சதவீதமாகும். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,08,54,128 போ் குணமடைந்தனா்.  நாட்டில் தற்போது 1,80,304 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

ADVERTISEMENT

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி வெள்ளிக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 22 கோடியே 06  லட்சத்து 92 ஆயிரத்து 677 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை மட்டும் 7,51,935 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் 1 கோடியே 94 லட்சத்து 97 ஆயிரத்து 704 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

Tags : coronavirus India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT