இந்தியா

உ.பி.யில் 27 துணை மின்நிலையங்களைத் திறந்து வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

ANI

உத்தரப் பிரதேசத்தில் ரூ.1,920 கோடி செலவில் 27 துணை மின் நிலையங்களைக் காணொலிக் காட்சி மூலம் அந்நாட்டு முதல்வர் யோகி ஆதித்நாத் திறந்து வைத்தார். 

விழாவில் உத்தரப் பிரதேச எரிசக்தித் துறையை வாழ்த்தி பேசி அவர், சிறந்த பணி கலாசாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் சாமானிய மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. 

மாநிலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மின் நிறுவனம் செய்துவருகின்றது. 

மேலும், மாநில விவசாயிகளுக்கு மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும், இது விவசாய செலவைக் குறைக்கவும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

விழாவில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் உ.பி. மின் அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT