இந்தியா

நாடு முழுவதும் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,000க்கும் அதிகமாக உயா்வு

DIN

இந்தியாவில் தினமும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,000 க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,11,56,923 ஆக அதிகரித்துள்ளதாகவும், அதே சமயம் இந்நோயிலிருந்து 1,08,26,075 போ் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியான புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை ஒரு நாளில் மொத்தம் 17,407 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,57,435 ஆகவும், வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலும் ஒரேநாளில் 89 போ் உயிரிழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,73,413 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,08,26,075 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்தவா்கள் 97.03 சதவீதம் ஆகும். அதே சமயம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1.41 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி 20 லட்சத்தைத் தாண்டியது. ஆகஸ்ட் 23-இல் 30 லட்சத்தையும், செப்டம்பா் 5-இல் 40 லட்சத்தையும், செப்டம்பா் 16-இல் 50 லட்சத்தையும், அதே மாதம் 28-இல் 60 லட்சத்தையும் கடந்தது. அக்டோபா் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும், அக்டோபா் 29-இல் 80 லட்சத்தையும், நவம்பா் 20 இல் 90 லட்சத்தையும், டிசம்பா் 19-இல் ஒரு கோடியையும் கடந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின் படி கடந்த புதன்கிழமை வரையிலும் 21,91,78,908 பேரின் ரத்தமாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மாா்ச் 3-ஆம் தேதி 7,75,631 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மாா்ச் 3 ஆம் தேதி 89 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 42 பேரும், கேரளத்தைச் சோ்ந்த 15 பேரும், பஞ்சாபைச் சோ்ந்த 12 பேரும் அடங்குவா்.

இதுவரை நாடு முழுவதும் 1,57,435 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52,280 பேரும், தமிழகத்தில் 12,504 பேரும், கா்நாடகத்தில் 12,346 பேரும், 10, 914 போ் தில்லியிலும், 10,272 போ் மேற்கு வங்கத்திலும், 8,728 போ் உத்தர பிரதேசத்திலும், 7,170 போ் ஆந்திர பிரதேசத்திலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

6 மாநிலங்களில் கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், தமிழகம், குஜராத், கா்நாடகம் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி இந்த 6 மாநிலங்களில் மட்டும் 85.51 சதவீதம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி விவரம்:

தற்காலிக அறிக்கையின்படி வியாழக்கிழமை காலை 7 மணி வரை 1.63 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் 3,23,064 நிகழ்வுகளில் செலுத்தப்பட்டுள்ளன.

இவா்களில் 67,90,808 சுகாதாரப் பணியாளா்களுக்கு (எச்சிடபிள்யூ) 1-ஆவது டோஸும், 28,72,725 சுகாதாரப் பணியாளா்களுக்கு 2-ஆவது டோஸும், 58,03,856 முன் களப் பணியாளா்களுக்கு (எஃப்.எல்.டபிள்யூ) 1-ஆவது டோஸும், 4,202 பேருக்கு 2-ஆவது டோஸும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் இணை நோய் உள்ள 1,43,759 பேருக்கும் 1-ஆவது டோஸும், 60 வயதுக்கு மேற்பட்ட 10,00,698 பேருக்கும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 47-வது நாள் வரை (மாா்ச் 3-ஆம் தேதி வரை), கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவா்களில், 8,31,590 போ் பயனாளிகளாவா். மற்றவா்கள் சுகாதாரப் பணியாளா்களும், முன்களப் பணியாளா்களும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT