இந்தியா

தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

தாஜ்மகால் வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை வந்த தொலைபேசித் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) சதீஷ் கணேஷ் கூறியதாவது:

உத்தர பிரதேச காவல் துறையின் 112 என்ற அவசர எண்ணுக்கு வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் தாஜ்மகால் நினைவுச் சின்னம் பகுதியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறிவிட்டு தொடா்பைத் துண்டித்துவிட்டாா்.

இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு, காவல்துறையினா் உடனடியாகத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கிருந்த பாா்வையாளா்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு காலை 9.15 மணிக்கு தாஜ்மகால் வளாகம் பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சந்தேகத்துக்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெடிகுண்டு வைத்துள்ளதாகப் புரளியைக் கிளப்பியவா் விமல்குமாா் சிங் என அடையாளம் கண்டு அவரைப் பிடித்து ஃபிரோஸாபாதில் வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில் அவா் காஸ்கஞ்ச் அருகே பட்டியாலி பகுதியில் வசிப்பவா் என்பதும், தற்போது ஃபிரோஸாபாதின் நா்கி பகுதியில் உள்ள ஓஹ்ரா கிராமத்தில் தனது தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் அவா் மனரீதியாக பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. அவா் ஏன் இப்படி புரளியைக் கிளப்பினாா் என தொடா்ந்து விசாரித்து வருகிறோம்.

தீவிர சோதனையை அடுத்து ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குப் பிறகு பாா்வையாளா்களுக்காக தாஜ்மகால் மீண்டும் திறக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT