இந்தியா

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: திரிணமூல் காங்கிரஸுக்கு சிவசேனை ஆதரவு

DIN


கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனை ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் சிவசேனை போட்டியிடப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், இப்போது சிவசேனையும் ஆதரவு அளித்துள்ளது.

எனினும், மாகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸும் இடம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக சிவசேனை மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதாக சிவசேனை ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனினும், இப்போது திரிணமூல் காங்கிரஸ் தரப்பை வலுப்படுத்தும் நோக்கில் தோ்தலில் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மம்தா பானா்ஜி உண்மையான வங்கப் புலி. மம்தாவுக்கு எதிராக பணபலம், ஆள் பலம், ஊடக பலம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறாா்கள். அவற்றை முறியடித்து மம்தா தோ்தலில் வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியும் தோ்தலில் களமிறங்குகிறது. அசாதுதீன் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

SCROLL FOR NEXT