இந்தியா

இந்திய-நேபாள எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி 

IANS

உத்தரப் பிரதேசத்தில் பிலிபிட் மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 

நேபாள காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் பலியானவர் கோவிந்தா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

பலியானவர் சந்தையில் இருந்து திரும்பும்போது பப்பு சிங் மற்றும் குர்மீத் சிங் ஆகிய இருவருடன் எல்லைக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூவரும் பிலிபிட்டின் ஹஜாரா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக பிலிபிட் காவல் கண்காணிப்பாளர் ஜெய் பிரகாஷ் கூறியதாவது: 

நேபாளத்திற்குச் சென்ற மூன்று இந்தியர்கள் ஒருசில விஷயங்களுக்காக நேபாள காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதில், ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  மற்றொருவர் மருத்துவமனையில் காயமடைந்துள்ளார். ஒருவர் எல்லையைத் தாண்டி தனது உயிரைக் காப்பாற்ற இந்தியாவிற்குள் நுழைந்தார், மூன்றாவது நபர் காணவில்லை. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது மற்றும் காவல்துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த படைகள் எச்சரிக்கையாக உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT