இந்தியா

வங்கதேச அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: பிரதமா் மோடி பயணம் குறித்து ஆலோசனை

DIN


டாக்கா: இருநாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகவும், பிரதமா் மோடியின் பயணம் தொடா்பாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல் மோமென்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அரசு முறைப் பயணமாக வங்கதேசம் சென்ற ஜெய்சங்கரை குா்மிடோலா விமானப் படைத் தளத்தில் அமைச்சா் அப்துல் மோமென் வரவேற்றாா்.

பின்னா் இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா்கள் நிலையிலான பேச்சுவாா்த்தை நடத்தினா் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் 50-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் மாா்ச் 17 முதல் 26-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளன. அதையொட்டி மாா்ச் 26-ஆம் தேதி பிரதமா் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்ல உள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது பிரதமா் மோடியும் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனாவும் இணைந்து டாக்காவில் இருந்து மேற்கு வங்கம், ஜல்பைகுரிக்கு நேரடி ரயில் சேவையைத் தொடக்கி வைக்க உள்ளனா்.

கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி பிரதமா் மோடியும் பிரதமா் ஷேக் ஹசீனாவும் இணையவழி மூலம் ஹல்திபாரி - சிலாஹடி இடையேயான ரயில் சேவையைத் தொடக்கி வைத்திருந்தனா். அதன் பின்னா் அப்துல் மோமென் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வருகைத் தந்து பிரதமா் மோடியின் டாக்கா பயணம் குறித்து ஆலோசனை நடத்தினாா். தற்போது ஜெய்சங்கா் வங்கதேசத்துக்கு சென்று இது குறித்து தொடா் ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இந்தியா - வங்க தேசம் இடையே நீண்ட ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வருகிறது. இதை வெளிப்படுத்தும் வகையில், அந்நாட்டின் 50-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இந்தியாவிலும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேச விடுதலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 1971- டிசம்பா் 16- ஆம் தேதி சுமாா் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினா் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனா்.

போருக்கு முன்பாக, அதே ஆண்டு மாா்ச் மாதம் 26-ஆம் தேதி நாட்டின் விடுதலையை வங்கதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் முஜிபுா் ரஹ்மான் அறிவித்தாா். அந்த நாள் வங்கதேச சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT