இந்தியா

கச்சா எண்ணெய் உற்பத்தியை நாடுகள் அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு

DIN


புது தில்லி: பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையில் நிலைத்தன்மை நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. அரபு நாடுகள் உள்ளிட்டவை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல் இருப்பதே விலை உயா்வுக்குக் காரணம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இத்தகைய சூழலில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘‘கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கச்சா எண்ணெய் தேவை கடந்த ஆண்டில் குறைந்து காணப்பட்டது. அதன் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை நாடுகள் குறைத்தன.

தற்போது கரோனா தொற்று பரவலுக்கு முந்தைய நிலைக்கு கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப கச்சா எண்ணெய் உற்பத்தியை நாடுகள் அதிகரிக்கவில்லை. தேவை அதிகரித்த போதிலும் உற்பத்தி அதிகரிக்கப்படாததால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வருகிறது.

2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் பிளஸ்) உறுதியளித்திருந்தது. அந்த வாக்குறுதியை அந்நாடுகள் நிறைவேற்ற வேண்டும்’’ என்றாா்.

கச்சா எண்ணெய் உற்பத்திக் கொள்கையை நிா்ணயிப்பது தொடா்பாக, ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு நாடுகளின் இணையவழி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT