இந்தியா

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கரோனா தடுப்பூசி

DIN


புது தில்லி: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கரோனா தடுப்பூசி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குருசரண் கெளா் ஆகியோா் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டனா்.

தடுப்பூசியை செலுத்திய பிறகு அரைமணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவா்கள் பின்னா் நலமுடன் வீடு திரும்பினா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை போட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட சுட்டுரை செய்தியில், ‘ வியாழக்கிழமை காலையில் முதல்கட்ட கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். மிகுந்த அக்கறையுடன் கரோனா தடுப்பூசியை செலுத்த உதவிய செவிலியா் ரம்யாவுக்கு மிக்க நன்றி. மலிவான விலையில் இந்தியாவில் தடுப்பூசிகள் கிடைப்பது நமது அதிருஷ்டமாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இவா்களைத் தவிர, ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவுக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மனோஷ் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்கட்ட கரோனா தடுப்பூசியை மிக எளிதான முறையில் செலுத்திக் கொண்டேன். தகுதியுள்ள அனைவரும் இந்த தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். கோவேக்ஸின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இதனை தயாரித்த நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குா், அம்மாநில அவைத்தலைவா் விபின் சிங் பாா்மா், மத்திய பிரதேச முதல்வா் சிவ்ராஜ் சிங் செளஹான் உள்ளிட்டோரும் முதல்கட்ட கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT