இந்தியா

கரோனா தடுப்பூசி: வழக்கம் மாறுகிறது

DIN


கரோனா.. இது மாற்றிச் சென்ற பல விஷயங்களைப் பட்டியலிட்டால் ஒரு நாள் போதாது. பள்ளிக்கு செல்லிடப்பேசியைக் கொண்டு வரக் கூடாது என்ற கட்டளையை மாற்றி, பள்ளியையே செல்லிடப்பேசிக்குள் கொண்டு வந்ததே இந்த கரோனாதான்.

இந்த உலகமே ஏதோ தங்களுக்காகத்தான் என்று ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த மனித குலத்தை சிறிது காலம் வீட்டுக்குள் முடக்கி, விலங்குகளையும் பறவைகளையும் சுதந்திரமாக நடமாட வைத்துப் பார்த்ததும் இந்த பேரிடர்காலம்தான்.

அந்த வகையில் தற்போது காலம் காலமாக இருந்து வந்த ஒரு வழக்கத்தையும் கரோனா மாற்றிக்காட்டியுள்ளது. அதாவது பிறந்த குழந்தைகள் முதல் அவர்களுக்கு 15 வயது ஆகும் வரை பல கட்டங்களாக தடுப்பூசிப் போடுவது வழக்கம். பெற்ற பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட அவர்களது பெற்றோர்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். 

ஆனால், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பிள்ளைகள் தங்களது வயதான பெற்றோரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வது தற்போது தொடங்கியுள்ளது.

தங்களது தந்தை மற்றும் தாய் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை புகைப்படங்களுடன் சில பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இது தொடர்பான ஆரோக்கியமான கிண்டல்களும் கருத்துகளாகப் பதிவாகி வருகிறது.

இதில் ஒரு சில விசேஷங்களும் உண்டு, அதாவது சில 60 வயது நபர்கள், தங்களது பெற்றோருடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் நடக்கிறது. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பெற்றோருடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இன்று இந்த அளவுக்கு கரோனா பாதிப்பு என்ற செய்திகளுடன் இன்று இவர்கள் எல்லாம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்ற செய்தியும் தற்போது அதிகரித்து வருகிறது. முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT