இந்தியா

பஞ்சாப் பேரவையில் தொடர் அமளி: சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

5th Mar 2021 06:58 PM

ADVERTISEMENT

பஞ்சாப் சட்டப்பேரவையில் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் உரையின் போது தொடர் அமளியில் ஈடுபட்டதாக சிரோமணி அகாலிதளத்தின் எம்எல்ஏக்களை பட்ஜெட் கூட்டம் முழுவதும் இடைநீக்கம் செய்து சபைத்தலைவர்  உத்தரவிட்டார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது முதல்வர் அமரீந்தர் சிங் பேசினார். 

அப்போது அவரை பேசவிடாமல் சிரோமணி அகாலிதளம் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபைத்தலைவர் உத்தரவிட்டார். 

மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை அவர்களை இடைநீக்கம் செய்வதாகவும் அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள சிரோமணி அகாலிதளம்  ஆளும் அரசை கண்டித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Punjab SAD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT