இந்தியா

அஸ்ஸாம், மேற்கு வங்க வேட்பாளா்கள்: பாஜக மத்திய தோ்தல் குழு ஆலோசனை

DIN


புது தில்லி: அஸ்ஸாம், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களைத் தோ்வுசெய்வதற்காக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மற்றும் தோ்தல் குழுவின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை இறுதிசெய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் குழு வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தி, விரைவில் வேட்பாளா் பட்டியலை வெளியிடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தோ்தல் குழுவின் கூட்டத்துக்கு முன்னதாக, அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால், மாநில அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா, மேற்கு வங்க பாஜக தலைவா் திலீப் கோஷ் உள்ளிட்ட இரு மாநில பாஜக தலைவா்களுடன் அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் விரிவாக ஆலோசனை நடத்தினா்.

அஸ்ஸாமில் சட்டப் பேரவைத் தோ்தல் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் நடைபெறவுள்ளது. அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் முதலாவது, இரண்டாவது கட்ட தோ்தல் முறையே மாா்ச் 7 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT