இந்தியா

ஹிட்லர் மீசை விமரிசனம்: லோகோவை மாற்றியது அமேஸான்

DIN


வாஷிங்டன்: மின்னணு வணிகத்தில் ஈடுபட்டு வரும் அமேஸான் நிறுவனம், ஹிட்லர் மீசை போன்ற இருப்பதாக விமரிசனம் எழுந்த நிலையில், தனது புதிய லோகோவை மாற்றியுள்ளது.

செல்லிடப்பேசி செயலிகளுக்கான லோகோவில் இதுவரை இருந்த கடைகளில் பொருள்களை வாங்கப் பயன்படுத்தும் தள்ளுவண்டி போன்ற படத்தை மாற்றிவிட்டு, கடந்த மாதம் தான் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது. அதில், காக்கி நிற அட்டைப் பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது போன்று அதில் ஒரு அம்புக்குறியை சிரிப்பை உணர்த்துவது போன்ற வடிவிலும் அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது அமேஸானில் பொருள்களை வாங்கும் போது ஒரு அட்டைப்பெட்டியில் வருவதைப் போன்றே தனது லோகோவையும் அமைத்திருந்தது.

ஆனால், இந்த புதிய லோகோ, அடோல்ஃப் ஹிட்ரின் மீசையை நினைவுபடுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விமரிசனங்கள் எழுந்தன. இது நிறைய பயனாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் புதிய லோகோவில் ஒரு சின்ன மாற்றத்தை செய்து புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. அதாவது பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த டேப்-பின் அமைப்பை மாற்றி வடிவமைத்து, விமரிசனத்திலிருந்து தப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT