இந்தியா

மார்ச் 6-ல் ம.பி. செல்கிறார் குடியரசுத் தலைவர்

5th Mar 2021 04:19 PM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக மார்ச் 6-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு செல்லவுள்ளார்.

அங்கு ஜாபல்பூர், தாமோ மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், மார்ச் 6-ம் தேதி தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் மத்தியப் பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளார்.

மார்ச் 6-ம் தேதி ஜாபல்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். மார்ச் 7-ம் தேதி தாமோ மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : President
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT