இந்தியா

தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு புரளி: பார்வையாளர்கள் வெளியேற்றம்

4th Mar 2021 11:47 AM

ADVERTISEMENT


புது தில்லி: தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

உத்தரப்பிரதேசத்தின் அவசர உதவி எண்ணான 112-ஐ தொடர்பு கொண்ட மர்ம நபர், தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ் மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார். மத்திய தொழிற்பாதுகாப்புப் டையின் ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேச காவல்துறை, தொழிற் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர்.

உடனடியாக, காலை 9.15 மணிக்கு தாஜ் மஹாலுக்குள் இருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும், தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என்றும் தெரிய வந்தது.

ஃபிரோஸாபாத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருப்பதையும், உத்தரப்பிரதேச காவல்துறை கண்டுபிடித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : Taj Mahal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT