இந்தியா

தமிழகம், கேரளம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு 

4th Mar 2021 06:54 PM

ADVERTISEMENT

தமிழகம், கேரளம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகத்தில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 9,855 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளத்தில் 2,765 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று  1,73,413-ஐ எட்டியுள்ளது. 
இது மொத்த பாதிப்பில் 1.55 சதவீதம். மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர், கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT