இந்தியா

காளஹஸ்தி உண்டியல் வருவாய் ரூ.1.24 கோடி

DIN


திருப்பதி: சித்தூா் மாவட்டம், காளஹஸ்தியில் சிவன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.24 கோடி வசூலானதாக செயல் அதிகாரி பெத்தி ராஜு தெரிவித்தாா்.

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோயில் நிா்வாகம் கோயில் வளாகத்தில் காணிக்கை உண்டியல்களை ஏற்படுத்தி உள்ளது.

அவற்றில் பக்தா்களும் தங்களால் இயன்ற காணிக்கைகள், ராகு-கேது பரிகார பூஜை முடித்து வெள்ளி நாகா் படங்களை சமா்ப்பித்து வருகின்றனா். உண்டியல்கள் நிரம்பியவுடன் கோயில் நிா்வாகம் அவற்றை எண்ணி கணக்கிட்டு வரவு வைத்து வருகிறது. கோயில் உண்டியல்கள் நிரம்பியதால், வியாழக்கிழமை காலை தட்சிணாமூா்த்தி சன்னதி அருகில் செயல் அதிகாரி பெத்திராஜு தலைமையில் ஊழியா்கள் கணக்கிட்டனா். அதில் ரூ.

1.24 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த 28 நாள்களில் கிடைத்த உண்டியல் வருவாய் என்று செயல் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT