இந்தியா

இந்தியாவில் 1.66  கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

4th Mar 2021 11:41 AM

ADVERTISEMENT


புதுதில்லி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசு நீக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்துள்ள நிலையில்,  நாட்டில் இதுவரை 1,66,16,048 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்தியாவில் காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,11,56,923 ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 89 போ் உயிரிழந்தனா். 14,031 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,26,075 ஆகவும், நாட்டில் தற்போது 1,73,413 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இந்த நிலையில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், அதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசு நீக்கியுள்ளது. அதன் மூலம், தினமும் 24 மணி நேரமும் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். குடிமக்களின் நேரம் மற்றும் உடல் நலனின் முக்கியத்துவத்தை பிரதமா் நரேந்திர மோடி புரிந்துகொண்டிருப்பதால், இந்த நேரக் கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறாா் என்று மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்தியாவில் நேற்று புதன்கிழமை மாலை வரை 1,66,16,048 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு, சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது. 

முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு 28 நாள்களைப் பூா்த்தி செய்தவா்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் தொடங்கின.

Tags : Total vaccination India Union Health Ministry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT