இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு கரோனா: 89 பேர் பலி

DIN

புது தில்லி: நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில்17,407 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 17,407  பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,11,56,923 ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 89 போ் உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,57,435 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,08,26,075 போ் குணமடைந்தனா்.  இது மொத்த பாதிப்பில் 97.03 சதவீதமாகும். நாட்டில் தற்போது 1,73,413 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி புதன்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 91  லட்சத்து 78 ஆயிரத்து 908 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், புதன்கிழமை மட்டும் 7,75,631 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மாலை  வரையிலும் 1 கோடியே 66 லட்சத்து 16 ஆயிரத்து 48 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT