இந்தியா

சுற்றுலாவை மேம்படுத்த ஸ்ரீநகரை அழகூட்டும் பணிகள் தீவிரம்

4th Mar 2021 01:13 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஸ்ரீநகரை பொலிவுறும் நகராக மாற்றும் திட்டத்தின் கீழ் அழகூட்டும் பணிகளை ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள மேம்பாலத் தூண்களில், ஜம்மு - காஷ்மீரின் பாரம்பரியத்தை உணர்த்தும் ஓவியங்களைத் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஸ்ரீநகரை பொலிவுறும் நகராக மாற்றும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக ஸ்ரீநகர் பொலிவுறும் நகரத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரை பொலிவுறும் நகர திட்டத்தின் குழ் அழகூட்டுவதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பதால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் உயரும் என்று மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT