இந்தியா

வேளாண் போராட்டம்: டிராக்டரை இல்லமாக்கிய விவசாயி

4th Mar 2021 03:25 PM

ADVERTISEMENT


கோடை காலம் நெருங்கவுள்ளதையொட்டி தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது டிராக்டரை இல்லமாக மாற்றியுள்ளனர்.

கொசுத்தொல்லை, வெயில் உள்ளிட்டவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், டிராக்டரை இல்லமாக விவசாயிகள் மாற்றியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 98 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பனியிலும், மழையிலும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அடுத்த சில நாள்களில் கோடைக்காலம் நெருங்கவுள்ளது.

ADVERTISEMENT

இதனையொட்டி போராட்டக்களத்தில் கோடையை எதிர்கொள்ள தயாராகும் வகையில், தங்களது டிராக்டரை விவசாயிகள் சிலர் இல்லமாக மாற்றியுள்ளனர்.

டிராக்டரின் பின்புறத்தில் கூடாரம் அமைத்து, படுக்கை வசதி, மின்சார வசதி, மின்விசிறி, கொசுதடுப்பான் மருந்து, விளக்கு உள்ளிட்டவற்றை அமைத்துள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பின்வாங்காமல், தொடர்ந்து போராடும் வகையில் காலநிலைகளை சமாளிக்க தயாராகவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT