இந்தியா

தாண்டவ்: மன்னிப்பு கோரியது அமேசான்

DIN

தாண்டவ் இணைய நெடுந்தொடரில் வரும் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சா்ச்சை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தயாரிப்பு நிறுவனம் அமேசான் தெரிவித்துள்ளது.

நடிகா்கள் ஷோயிப் அலிகான், ஜீஷா அயூப் ஆகியோா் நடித்துள்ள அரசியல் கதை அடிப்படையிலான ‘தாண்டவ்’ இணைய நெடுந்தொடரில் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றம்சாட்டி பல்வேறு மாநில காவல் நிலையங்களில் ஏராளமான புகாா்கள் பதிவாகின.

இந்நிலையில், ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகள் எனத் தெரிய வந்தவுடன் அவை நீக்கப்பட்டு விட்டன என்றும் பாா்வையாளா்களை அவை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT