இந்தியா

குலாம் நபி ஆசாதை நீக்கக் கோரி காங்கிரஸார் போராட்டம்

DIN

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதை நீக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீரில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 குலாம் நபி ஆசாதுக்கு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ள 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்றும் கட்சியைப் பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் மோடி தனது வாழ்வில் தேனீர் விற்றதை மறைக்காமல் வெளிப்படையாக கூறியுள்ளார் என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.
 இந்நிலையில், சுயஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து காங்கிரஸ் கட்சியைப் பயவீனப்படுத்த குலாம் நபி ஆசாத் முயல்வதாக குற்றம்சாட்டி ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர் காங்கிரஸார் அவரது உருவ பொம்மையை எரித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஜம்மு காஷ்மீரின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ஷானவாஸ் சௌதரி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் என காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆசாதுக்கு பல பதவிகளை அளித்துள்ளது. ஆனால் தற்போதைய இக்கட்டான சூழலில் அவரது அரசியல் அனுபவம் கட்சிக்கு தேவை என்ற போது அவர், ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் மோடியைப் பாராட்டுகிறார்.
 காங்கிரஸ் கட்சியைப் பலவீனமாக்குகிறார். அவர் மீது காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து, கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT