இந்தியா

‘நீங்கள் எங்களுக்கு கற்றுத் தர வேண்டியதில்லை’: பாஜகவை விமர்சித்த உத்தவ் தாக்கரே

3rd Mar 2021 05:09 PM

ADVERTISEMENT

இந்துத்துவத்தை உங்களிடமிருந்து கற்க வேண்டிய அவசியமில்லை என சிவசேனையின் தலைவரும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வருமான உத்தவ்தாக்கரே பாஜகவை விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை சட்டப்பேரவையில் பேசிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வல்லபாய் படேலின் பெயரில் இருந்த கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டது குறித்து விமர்சித்தார். 

“நாங்கள் சத்ரபதி சிவாஜியின் பெயரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சூட்டினோம். ஆனால் பாஜக அரசு வல்லபாய் படேலின் பெயரை நீக்கி நரேந்திரமோடியின் பெயரை கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்டியுள்ளது” என அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்துத்துவ கருத்தியலை பாஜகவிடமிருந்து கற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Narendra Modi stadium Maharashtra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT