இந்தியா

‘நாட்டை வல்லரசாக்க விரும்புகிறோம்’: மேற்கு வங்கத்தில் நிதின்கட்கரி பேச்சு

3rd Mar 2021 06:28 PM

ADVERTISEMENT

நாட்டை முதன்மையான வல்லரசு நாடாக மாற்ற பாஜக அரசு விரும்புவதாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக பாஜக தலைவர்கள் பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை ஜாய்பூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தத் தேர்தல் பாஜக, திரிணமூல், காங்கிரஸ், இடதுசாரிகளின் எதிர்காலம் பற்றியது அல்ல. மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் எதிர்காலம் பற்றியது அல்ல. இது மேற்கு வங்க மக்களின் எதிர்காலத்தைப் பற்றியது” எனத் தெரிவித்தார்.

மேலும், “பாஜக அரசு மேற்கு வங்கத்தின் பிம்பத்தை மாற்ற விரும்புகிறது. நாங்கள் நாட்டை முதன்மை வல்லரசாக மாற்ற விரும்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : WBElections2021 Nitin gadkari
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT