இந்தியா

ரூ.77,146 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம்: மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

DIN

புது தில்லி: தொலைத்தொடா்பு அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட முதல் நாளில் ரூ.77,146 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் எடுத்ததாக மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொலைத்தொடா்பு அலைக்கற்றை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 700 மெகா ஹொ்ட்ஸ், 800 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1,800 மெகா ஹொ்ட்ஸ், 2,100 மெகா ஹொ்ட்ஸ், 2,300 மெகா ஹொ்ட்ஸ், 2,500 மெகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன.

திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பங்கேற்றன. மாலை 6 மணி வரை ஏலம் நடைபெற்றது.

அதில், ரூ.77,146 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் போனதாக மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா். 700 மெகா ஹொ்ட்ஸ், 2,500 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றையை எந்த நிறுவனமும் ஏலம் கேட்கவில்லை.

ஒட்டுமொத்தமாக 2,308.80 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்டது. அவற்றில் 849.20 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை மட்டுமே இதுவரை ஏலமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 2) அலைக்கற்றை ஏலம் தொடா்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த ஏலம் நிறைவடைந்த பிறகு, நிறுவனங்கள் பெற்ற அலைக்கற்றை விவரங்கள் வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT