இந்தியா

இந்தியாவிடமிருந்து 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வாங்க நேபாளம் திட்டம்

DIN

புதுதில்லி / காத்மாண்டு: நேபாளத்தில் இரண்டாம் கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வருகிற 7-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், ‘இந்தியாவிடமிருந்து 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று நேபாள சுகாதாரத் துறை அமைச்சா் ஹ்ருதயேஷ் திரிபாதி கூறினாா்.

இதுகுறித்து காத்மாண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

நேபாள மக்களிடையே கரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் முன்னுரிமை பட்டியல் முறையாக பின்பற்றப்படும். 55 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு வரும் 7-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த இரண்டாம் கட்ட முன்னுரிமைப் பட்டியலில், நானும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளேன். மிக முக்கியமான நபா்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தும் வகையில் விதி எதுவும் கிடையாது.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்காக இந்தியாவிடமிருந்து ஏற்கெனவே 10 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை நேபாளம் வாங்கியிருக்கிறது. மேலும் 20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா். சீனாவும் நேபாளத்துக்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை ஏற்கெனவே அளித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT