இந்தியா

அமித் ஷாவின் திருப்பதி பயணம் ரத்து

DIN

திருப்பதி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் திருப்பதி பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் தென்னிந்திய முதல்வா்கள் மற்றும் துணை நிலை ஆளுநருா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல் முறையாக மாா்ச் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்க திருப்பதிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநில முதல்வா்களுக்கும், புதுவை துணை நிலை ஆளுநருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமித் ஷாவின் திருப்பதி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சித்தூா் மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை காலை அறிவித்தது.

முன்னதாக, இந்தப் பயணத்தின்போது திருப்பதியில் நடக்கவுள்ள மக்களவைத் தொகுதிக்கான இடைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பெயரை அமித் ஷா அறிவிப்பாா் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT