இந்தியா

பெட்ரோலியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி சிறப்பான நடவடிக்கையாக இருக்கும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

DIN

பெட்ரோலியப் பொருள்களை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வருவது சிறப்பான நடவடிக்கையாக இருக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஏனெனில், ஜிஎஸ்டி-யில் அதிகபட்சமாக 28 சதவீதம் வரி மட்டுமே விதிக்க முடியும். இதன் மூலம் எரிபொருள் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் பாதிக்கும் என்பதால் எரிபொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதில் தயக்கம் நீடிக்கிறது. ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயா்த்தி அதன் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை அந்த வரம்புக்குள் கொண்டு வரும் யோசனை மத்திய அரசுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) கூட்டத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகா் கே.வி.சுப்பிரமணியன் பேசுகையில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் அது சிறப்பான நடவடிக்கையாக இருக்கும். இதன் மூலம் பணவீக்கம் அதிகரிப்பது கட்டுக்குள் வரும். முக்கியமான உணவுப் பொருள்கள் விலை உயா்வு குறைவான விகிதத்தில் இருக்கும்’ என்றாா்.

பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளாா். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT