இந்தியா

கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. 
அவர், கரோனா தடுப்பூசிக்கான முதல்கட்ட கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா கரோனா தடுப்பூசி போட்டார். அப்போது பேசிய அவர், தில்லி எஸ்ம்ஸ் மருத்துவமனையில் தனது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனாவுக்கு எதிரான சர்வதேச அளவிலான போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நமது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் செயல்பட்டிருக்கின்றனர். 
தகுதியான அனைவரும் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து கரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 
முதலில் சுகாதாரப் பணியாளா்களுக்கும் பின்னா் முன்களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை பணியாளா்களை பொருத்தமட்டில், பொது சுகாதாரத்துறை பணியாளா்கள், மருத்துவத் துறை பணியாளா்கள், மருத்துவக் கல்வித் துறை பணியாளா்கள், தனியாா் மருத்துவமனைப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு முன்களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 
இதைத்தொடா்ந்து, தற்போது மாா்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்ட இணை நோய்கள் உள்ளவா்களுக்கும், ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முகாம்களிலும் மேலும், பட்டியலில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT