இந்தியா

அரசியல் கட்சிகளுக்குப் போட்டியாக விளங்கும் நோட்டா 

DIN

'வாக்களிக்க வேண்டும், ஆனால் வாக்களிக்கக் கூடாது' என்ற மனப்பான்மை கொண்ட வாக்காளர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் நோட்டா.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில், மேற்கண்ட வேட்பாளர்களில் எவருமில்லை என்பதைப் பதிவு செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, நோட்டா என்ற வாய்ப்பு இணைக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 128ன் படி வாக்களிக்க இரகசிய பராமரிப்பு என்று ஒரு தனிப்பிரிவு உள்ளது. அதன்படி முந்தைய காலங்களில் தமிழக மாநில தேர்தல் துறை 49 - (O) விதியின்படி வாக்குச்சாவடி அதிகாரியிடம் சென்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டியிருந்தது. அதனை மாற்றி, வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே, அந்த வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்தது. அதுதான் நோட்டா.

ஆனால், நோட்டா பற்றிய தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வால், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை விட ஒரு சில தொகுதிகளில் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்று, கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இதுதான்.

நோட்டா (None of the Above - NOTA)

நோட்டா என்பதற்கு மேற்கண்ட வேட்பாளர்களில் எவருமில்லை என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா. எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத ஒரு வாக்காளர், வாக்களிக்காமல் விட்டுவிடாமல், இந்த நோட்டா என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தனது வாக்கினைப் பதிவு செய்ய முடியும். இதனால், தனது வாக்கினை வேறு யாரும் போட்டு விடாமலும் தடுக்க முடியும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் இந்தப் பொத்தானானது ஆகக் கடைசியில் அமைந்திருக்கும்.

நோட்டாவின் அறிமுகம்

கடந்த 2013-ஆம் அண்டு மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய சட்டப்பேரவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

நோட்டா பதிவு செய்யும் முறை

ஓட்டளிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்கள் பட்டியலின் கடைசியில் நோட்டா இடம்பெற்றிருக்கும். அதை அழுத்த வேண்டும். இந்த ஓட்டை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் நீங்கள் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

நோட்ட அதிகம் பதிவானால்..

நோட்டா என்பது, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கான ஒரு வாய்ப்பு மட்டுமே. ஒரு தொகுதியில் அதிகளவில் நோட்டா பதிவானாலும் அதற்கு அடுத்து எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றுள்ளாரோ அவர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படும் நிலைதான் நீடிக்கிறது. நோட்டாவுக்கு பெரிய அளவில் எந்த அதிகாரமும் இல்லை.

ஆனால், சில மாநில தேர்தல் ஆணையங்கள் சார்பில், எந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானாலும், அந்தத் தொகுதிக்கு மறு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நோட்டாவிற்கு மதிப்பில்லை
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்தரத்தின் கீழ், வேட்பாளர்களை பிடிக்கவில்லை எனில், வாக்காளர்கள் அதை வெளிப்படுத்த அவர்களுக்கான ஓர் வாய்ப்பாக நோட்டா உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வளவே.

நோட்டா வாய்ப்பைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள்

கொலம்பியா, உக்ரைன், பிரேசில், பங்களாதேஷ், பின்லாந்த், ஸ்பெயின், ஸ்வீடன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளிலும் வாக்காளர்கள் நோட்டாவில் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT