இந்தியா

இந்தியா நன்கொடையளித்த டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை இயந்திரம்

DIN

இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டெலிகோபால்ட் இயந்திரம், மத்திய சுகாதாரத் துறை சாா்பில் தீவு நாடான மடகாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை அளிக்கும் இந்த இயந்திரமான ‘பாபட்ரான்- 2’ -ஐ மடகாஸ்கரின் தலைநகரான அன்டனனரிவோவில் உள்ள ஜோசப் ரவோஹாங்கி ஆண்ட்ரியனாவலோனா மருத்துவமனையில் (எச்ஜேஆா்ஏ) அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ஆண்ட்ரி ராஜோலினா திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ரஜோலினா பேசுகையில், புற்றுநோய் என்பது நம் சமூகத்தில் அதிகமான மக்களை பாதிக்கும் நோயாக மாறி விட்டது. மேலும் உயிரிழப்புக்கு முக்கிய காரணங்களில் இந்த நோயும் ஒன்றாக உள்ளது என்றாா்.

மடகாஸ்கருக்கான இந்திய தூதா் அபய் குமாா் பேசுகையில், உலகளவில் ஏராளமான மக்களை பாதிக்கும் புற்றுநோய் ஒரு பெரிய சுகாதார பிரச்னையாக உள்ளது என்றாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச்சில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மடகாஸ்கருக்கு விஜயம் செய்தபோது, பாபட்ரான் இயந்திரம் மடகாஸ்கருக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துஇந்தியாவில் இருந்து இந்த இயந்திரம் மடகாஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT