இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 3,979 பேருக்கு கரோனா

24th Jun 2021 07:06 PM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் புதிதாக 3,979 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அடங்கிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

புதிதாக 3,979 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,23,444 ஆக உயர்ந்துள்ளது.

9,768 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,78,473 பேர் குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் 138 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 34,425 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி 1,10,523 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 2.46 சதவிகிதம். இறப்பு விகிதம் 3.46 சதவிகிதம். 
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT