இந்தியா

கரோனா மூன்றாம் அலை: ஆட்சியர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் ஆலோசனை

24th Jun 2021 05:07 PM

ADVERTISEMENT

கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாட்டிலேயே கரோனா நோய்த் தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இதனிடையே, டெல்டா பிளஸ் என்ற வகையால் மூன்றாம் அலை உருவாகும் என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் 21 பேருக்கு புதிய வகை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிய வகை கரோனா கண்டறியப்பட்ட ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், சதாரா, சாங்லி, கோலாப்பூர் மற்றும் ஹிங்கோலி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பும் பங்கேற்றதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மூன்றாம் அலையை எதிர்க்கொள்ள தயாராக இருக்குமாறு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Corona third wave Maharastra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT