இந்தியா

ஆந்திரத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

24th Jun 2021 07:54 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 

எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. தற்போது மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மாநில அரசு வியாழக்க்கிழமை அறிவித்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT