இந்தியா

"தேர்தல் நிதியாக பாஜக ரூ.276 கோடி, காங்கிரஸ் ரூ. 58 கோடி வசூல்'

24th Jun 2021 04:12 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: 2019-20-ஆம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளை நிதியாக பாஜக ரூ.276.45 கோடி வசூலித்து முதலிடத்திலும், அடுத்ததாக காங்கிரஸ் ரூ.58 கோடி வசூலித்து இரண்டாம் இடத்திலும் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இந்த நிதியை வழங்கியதில் ஜின்டால் நிறுவனம் (ஜெஎஸ்டபிள்யு), அப்பல்லோ டயர்ஸ், இந்தியா புல்ஸ், தில்லி சர்வதேச விமான நிலையம், டிஎல்எஃப் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன என்று ஏடிஆர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஆம் ஆத்மி, சிவசேனை, சமாஜவாதி, யுவ ஜன் ஜாக்ரிதி கட்சி, ஜனநாயக கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா, லோக் ஜனசக்தி கட்சி, சிரோமணி அகாலி தளம், இந்திய தேசிய லோக் தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் நிதியாக மொத்தம் ரூ. 25.46 கோடி பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விதிமுறை வகுத்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT