இந்தியா

போலி டிஆர்பி வழக்கு: 2ஆவது குற்றப்பத்திரிகையில் அர்னாப் பெயர் சேர்ப்பு

DIN


மும்பை: போலி டிஆர்பி வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் பெயரை மும்பை காவல்துறை சேர்த்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எவ்வளவு பேர் பார்க்கின்றனர் என்பது டிஆர்பி புள்ளிகள் மூலம் தெரியவருகிறது. இந்தப் புள்ளிகளை தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு கவுன்சில் (பிஏஆர்சி) வெளியிடுவது வழக்கம்.
இதனிடையே சில தொலைக்காட்சி சேனல்கள் போலியாக டிஆர்பி எண்களை உருவாக்குவதாக இந்த அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மும்பை காவல் துறையில் ஒரு புகாரை அளித்தது. ஹன்சா ஆய்வுக் குழு மூலம் அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், போலி டிஆர்பி வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகையை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மும்பை காவல் துறையின் குற்ற உளவுப் பிரிவு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. அதில், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது வழக்குரைஞர் கூறுகையில் "குற்றப்பத்திரிகையில் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரின் பெயர்களும் ஏஆர்ஜி அவுட்லியர் அமைப்பின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

SCROLL FOR NEXT