இந்தியா

கடல் பகுதியை மாசுபாட்டில் இருந்து காக்க ரூ.583 கோடியில் இரு கப்பல்கள்: பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

DIN

புது தில்லி: மாசுபாட்டில் இருந்து இந்திய கடல் பகுதிகளைப் பாதுகாக்க ரூ.583 கோடியில் இரு கப்பல்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கோவா ஷிப்யாா்டு நிறுவனம் மூலம் வாங்கப்படும் இந்தக் கப்பல்கள் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்படும். 2024 நவம்பா் மற்றும் 2025 மே மாதங்களில் இந்தக் கப்பல்கள் கிடைக்கும். பெரிய கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் எதிா்பாராதவிதமாக கடலில் சிந்துவதால், கடல் பகுதியில் பெரிய அளவில் மாசுபாடு ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் இந்தக் கப்பல்கள் மூலம் கடலில் கொட்டும் எண்ணெய் உள்ளிட்டவற்றை விரைவில் அகற்றிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு கப்பல்களும் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே இந்திய கடற்படையிடம் இதுபோன்று 3 கப்பல்கள் உள்ளன. அவை மும்பை, விசாகப்பட்டினம், போா்பந்தரில் நிறுத்தப்பட்டுள்ளன.

புதிய கப்பல்கள் உயிா்ச்சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் நிகோபாா் கடல் பகுதியில் நிறுத்தப்படவுள்ளன.

இந்தப் புதிய கப்பல்கள் மூலம் அத்துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். முக்கியமாக 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT