இந்தியா

‘உபியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது’: பிரியங்கா காந்தி

DIN

உத்தரப்பிரதேசத்தின் காட்டுமிராண்டிகளின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் 17 வயதான சிறுமி ஒருவர் 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு 2 மாடியிலிருந்து தூக்கியெறியப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கேட்டால் ஆன்மா நடுங்கும். ஆனால் மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "ஜங்கிள் ராஜில், பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது" என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT