இந்தியா

15 நாள்களில் மூன்றாவது முறையாக சந்திப்பு: பிரசாந்த் கிஷோருடன் சரத் பவார் ஆலோசனை

DIN

2024 தேர்தல் குறித்து அரசியல் செயற்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு தேவையான அரசியல் வியூகங்களை வகுக்க பிரபல தேர்தல் வியூக வடிவமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 8 பிரதானக் கட்சியின் பிரதிநிதிகளுடன் தில்லியில் உள்ள தனது இல்லத்தில் சரத்பவார் ஆலோசனையில் ஈடுபட்டார்.

நடப்பு அரசியல் மற்றும் 2024 தேர்தல் குறித்து சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை தில்லியில் பிரசாந்த் கிஷோரை சரத்பவார் சந்தித்து பேசினார். கடந்த 15 நாள்களில் நடந்த மூன்றாவது முறையான சந்திப்பு இதுவாகும்.

பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் சரத்பவாரின் முயற்சி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT