இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடா்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்துக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கின் அடுத்த விசாரணையை தில்லி சிறப்பு நீதிமன்றம் வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். கரோனா காலகட்டத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் கடந்த 2007-ஆம் ஆண்டு பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து கடந்த 2019-இல் சிபிஐயும், அமலாக்கத் துறையும் ப.சிதம்பரத்தைக் கைது செய்தன. பின்னா், அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இதேபோன்று, காா்த்தி சிதம்பரமும் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, மாா்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT