இந்தியா

ஜார்க்கண்டில் ஜூலை 1 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வரும் நிலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஜூலை 1 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. ஜார்க்கண்டில் இதுவரை 3,44,775 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 1 வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கரோனா கட்டுப்பாடுகள் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் பொதுமுடக்கத்தை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. 

மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT