இந்தியா

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தில்லி பயணம்: மத்திய அமைச்சரவையில் இணைகிறது ஜேடியு?

DIN

பாட்னா: பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.

கண் மருத்துவ சிகிச்சைக்காக அவா் தில்லி செல்வதாகக் கூறப்படாலும், மத்திய அமைச்சரவையில் ஜேடியு இணைவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவா்களுடன் அவா் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடா்பாக அமித் ஷா உள்ளிட்ட அமைச்சா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-17 ஆண்டுகளைத் தவிா்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமாா் 30 ஆண்டுகளாக ஜேடியு உள்ளது. முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதீஷ் குமாரும் பதவி வகித்துள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சா் பதவி வழங்க முன்வந்தது. ஆனால், அப்போது தங்கள் கட்சிக்கு பதவி வேண்டாம் என்று ஜேடியு மறுத்துவிட்டது.

இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றம் மற்றும் விரிவாக்கத்தில் ஜேடியு இடம்பெறுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனை, மகாராஷ்டிர முதல்வா் பதவி பிரச்னையில் ஏற்கெனவே கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. இதுதவிர மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால், அக்கட்சிகள் சாா்பில் மத்திய அமைச்சா்களாக இருந்தவா்களும் பதவி விலகினா்.

இப்போதைய நிலையில் ஜேடியு மட்டுமே பாஜகவின் முக்கியக் கூட்டணிக் கட்சியாக உள்ளது. எனவே, அக்கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT