இந்தியா

பாஜகவுக்கு எதிராக புதிய அணி? எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் நோக்கில் சரத் பவார் ஏற்பாடு செய்துள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளின் கூட்டம் சரத் பவார் இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பாஜகவுக்கு எதிராக அணிசேரும் 15 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின், தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் அளித்த யோசனைப்படி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ராஷ்டிர மஞ்ச் என்ற ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அரசியலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திப்பதும், இந்தக் கூட்டணிக்கு தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி தலைமையேற்பதுமே தற்போதைய திட்டம்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த யஷ்வந்த் சின்ஹா 2018-ஆம் ஆண்டு உருவாக்கிய கோஷமே ராஷ்டிர மஞ்ச் எனப்படும் ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பாகும்.

அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க, காங்கிரஸ் அல்லாத 15 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, மாற்றுசக்தியை உருவாக்குவது என்பதே பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்திருக்கும் திட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT